இன்றைய நாட் பலன் உங்களுக்கு எப்படி? ராசிபலன்!!

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.13-04-2019, பங்குனி 30, சனிக்கிழமை, அஷ்டமி திதி பகல் 11.41 வரை பின்பு வளர்பிறை நவமி. புனர்பூசம் நட்சத்திரம் காலை 08.58 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஸ்ரீ ராம நவமி. சுப முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

பேஸ்புக்கில் Like செய்ய!!

மேஷராசி நேயர்களே:தாயாருடன் மனஸ்தாபம் வந்துச் செல்லும். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும்.அசையா சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும்.திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், . தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள்.

ரிஷப ராசி காரர்களே:பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் சற்று தாமதமாகத்தான் முடியும். உடல் நலனில் கவனமாக இருப்பது அவசியம். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனராசி காரர்களே:நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும்.சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். உறவினர்களால் ஆதாயம் உண்டு.வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். சகோதரர்களை அனுசரித்துச் செல்வது அவசியம்.

கடகராசி நேயர்களே:பொருளாதாரநிலை மேலோங்கி இருக்கும். உண்டாகும்.தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.சந்திரன் ராசிக்குள் நுழைவதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துச்செல்லும்.சிலருக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் தொடர் ஆதாயமும் கிடைக்கும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள்.

சிம்மராசி அன்பர்களே: பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள்.வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும்.தாயின் தேவையை நிறைவேற்றுவதற்காக செலவு செய்யவேண்டி வரும்.

கன்னி ராசி காரர்களே:எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பெற்றோரின் அரவணைப்பு அதிகரிக்கும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.முக்கிய முடிவுகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள்வது சாதகமாக முடியும்.உத்தியோகத்தில் சிலருக்கு உயர்பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.

துலாராசி உறவுகளே: உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். மாலையில் குடும்பத் துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள்.விருந்தினர் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும்.

விருச்சிகராசி நேயர்களே: கோபம் குறையும். நட்பு வட்டம் விரியும்.ற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும். உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் வேற்று மொழி நபர்களின் உதவியால் அனுகூலங்கள் உண்டாகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள்.

தனுசுராசி அன்பர்களே:சந்திராஷ்டமம் தொடங்குவதால் செலவுகள் அதிகமாகும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள்.

மகரராசி காரர்களே:நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.கல்யாண பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். விரும்பிய பொருட்களை வாங்கிமகிழ்வீர்கள்.

கும்பராசி உறவுகளே:தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள்.

மீனராசி நேயர்களே:உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும்.உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படலாம்.உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். மாலையில் நண்பர்களைச் சந்தித்து மகிழும் சந்தர்ப்பம் ஏற்படும்,

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!