இன்றைய நாட் பலன் உங்களுக்கு எப்படி? ராசிபலன்!!

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.14-04-2019, சித்திரை 01, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி காலை 09.36 வரை பின்பு தசமி. பூசம் நட்சத்திரம் காலை 07.39 வரை பின்பு ஆயில்யம் நட்சத்திரம் பின்இரவு 05.59 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. நவகிரக வழிபாடு நல்லது. விகாரி தமிழ் வருட பிறப்பு.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

பேஸ்புக்கில் Like செய்ய!!

மேஷராசி நேயர்களே:தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் குறையும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

ரிஷப ராசி காரர்களே:சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், அவர்களுக்காக வீண் செலவுகளும் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது.

மிதுனராசி காரர்களே:. வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் உண்டாகும்.கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள்.

கடகராசி நேயர்களே:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் அவ்வப்போது நினைவுக்கூர்ந்து பேசாதீர்கள்.உடல்நிலை சீராக இருக்கும். நீண்டநாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. உற்றார் உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.

சிம்மராசி அன்பர்களே:யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம்.நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். உங்கள் திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

கன்னி ராசி காரர்களே: நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள்.உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வேலையில் மற்றவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம்.

துலாராசி உறவுகளே:சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். சிலருக்குக் குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற் கொள்ள நேரிடும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள்.

விருச்சிகராசி நேயர்களே:பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள்.உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். நண்பர்கள் வகையில் சில பிரச்னை கள் ஏற்பட்டாலும், பாதிப்பு இருக்காது.

தனுசுராசி அன்பர்களே:சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது.கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

மகரராசி காரர்களே:வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக்கும்.குடும்பத்துடன் தெய்வ தரிசனத்திற்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள்.வீட்டில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.

கும்பராசி உறவுகளே: காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள்.

மீனராசி நேயர்களே:புதிய முயற்சிகளை யோசித்து எடுப்பது நல்லது. கடன்கள் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்கவும். வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!