சில நிமிட மகிழ்ச்சி தானே..எதற்கு சினம்.? ஆபாசம் அல்ல அவசியமான பதிவு..! திருமணமானவர்கள் மட்டும் பாருங்கள் பகிருங்கள்..!

வணக்கம் பிரண்ட்ஸ்..! இன்று மிக முக்கியமான விடயம் பற்றி பேசலாம் என்று நினைகிறேன். அப்படி என்ன தான் முக்கியமான விடயம் இருந்துவிட போகிறது என நீங்கள் நினைப்பது புரிகிறது. எம் வாழ்க்கையையும் அதில் ஏற்படும் பிளவுகள் பிரிவுகள் பற்றி பேசலாம். காதலித்து மற்றும் பேசி செய்யப் படும் இரண்டு திருமணங்களிலும் பிரிவு ஏற்படுகின்றது. இது எதற்காக? இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு பக்கமும் நாகரீக மோகம் இன்னுமொரு பக்கமுமே இருந்து கொண்டு நாசம் செய்கிறது. ஒரு பக்கம் சமூக வலைத்தளங்களில் இருக்கும் மோகத்தால் கணவன் குழந்தைகளை கவனிக்காத சில மனைவிமார்.
இன்னுமொரு பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சியின் பிடியில் சிக்கி இணையங்களில் கண்ட கண்டவற்றை பார்த்து

இப்படி நடந்துகொள் அப்படி நடந்துகொள் என மனைவியை தவறான முறைகளை பின் பற்ற வைக்கும் கணவர்கள். மறுக்கும் மனைவிகள் சிலரிடம் என் மனைவி நீ செய்யாவிட்டால் வேறு பெண்ணை தேடி செல்வேன் என்பது அல்லது தேடி செல்வது. இப்படியான விடையங்களால் கூட குடும்பங்கள் இன்று பிரிந்து நடு தெருவில் நிக்கிறது. சில பெண்களும் கணவனுக்கு துரோகம் செய்தல், நாகரீக மோகத்தால் சொர்கமான வாழ்க்கையை நரகமாக மாற்றுவது இதனால் ஒரு நிமிடம் யோசியுங்கள்,

உங்கள் சில நிமிட சந்தோசத்திற்காக எதுவும் அறியாத குழந்தைகள் அனாதைகளாக இருக்க வேண்டுமா ?எந்த காமத்தினாலும் காதலை மிஞ்சிவிட முடியாது. எதற்காக காதலை கொண்டு காமத்தை வளர்க்க வேண்டும்.? உங்கள் ஆசைகளை காதல் என்ற ஒன்றால் செயற்படுத்துங்கள்… ஆசையாய் கணவனிடம் பேசுங்கள். சீரியல் பார்த்து மூக்கை சிந்துவதை குறைத்துக் கொண்டு கணவனிடம் சிரித்து பேசுங்கள். கணவனின் காலடியில் இருக்க வேண்டாம் அவனது கண்ணீர் துடைக்கும் விரல்களாய் இருங்கள் பெண்களே..!

ஆண்களும் தான். பெண் அடி வயிறு வலி என்னும் போது எனக்கு ஆசை என்று சொல்லாதீர்கள். உன் வலியில் எனக்கும் பங்கு கொடு என்று சொல்லுங்கள். மாதவிடாய் நாட்கள் தீண்டத் தகாத நாட்கள் அல்ல அந்த மூன்று நாட்களும் அவள் மடியில் தலை சாயுங்கள். அவள் அருகில் அவள் விரலை கோர்த்தபடி நான் இருக்கிறேன் என்ற உணர்வை கொடுங்கள்.. நிச்சயம் அவள் அவனுக்கோ அவன் அவளுக்கோ துரோகியாக மாட்டார்கள்..குழந்தைகளும் கண்ணீரோடு அனாதையாக மாட்டார்கள். உங்களிடம் கெஞ்சி கேட்கிறோம் காதலை எப்போதுமே காமம் வெற்றி பெறாது..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!