இன்றைய நாட் பலன் உங்களுக்கு எப்படி? ராசிபலன்!!

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.15-04-2019, சித்திரை 02, திங்கட்கிழமை, தசமி திதி காலை 07.08 வரை பின்பு ஏகாதசி திதி பின்இரவு 04.23 வரை பின்பு வளர்பிறை துவாதசி. மகம் நட்சத்திரம் பின்இரவு 04.01 வரை பின்பு பூரம். மரணயோகம் பின்இரவு 04.01 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

பேஸ்புக்கில் Like செய்ய!!

மேஷராசி நேயர்களே:வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். வியாபாரத்தில் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி இருக்கும்.பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற் கேற்ப அவர்களை நெறிப் படுத்துவீர்கள்.

ரிஷப ராசி காரர்களே:வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதா யமும் உண்டு. எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம்.தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக் கவும்.

மிதுனராசி காரர்களே:சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். சகோதரங்களால் பயனடை வீர்கள். அதிகாரப் பதவியில்இருப்பவர்களின் நட்பு கிடைக் கும்.

கடகராசி நேயர்களே:கடந்த இரண்டுநாட்களாக கணவன்-மனை விக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்களால் ஓரளவுக்கு நன்மை ஏற்படும்.குடும்பத்தில் உள்ளவர்கள் அன்புடன் பழகுவார்கள். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மராசி அன்பர்களே: ராசிக்குள் சந்திரன் தொடங்கியிருப்பதால் பலவேலைகள் தடைப்பட்டுமுடியும். தர்மசங் கட மான சூழ்நிலைகளில்அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள்.எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள்.வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

கன்னி ராசி காரர்களே:பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். தேவையற்ற அலைச் சலுக்கு ஆட்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும்.தேவையற்ற அலைச் சலுக்கு ஆட்படுவீர்கள். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். எதிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள்.

துலாராசி உறவுகளே:கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.பழையசொந்த -பந்தங்கள்தேடிவருவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகராசி நேயர்களே:பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசுராசி அன்பர்களே:அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள் முதல் செய்வீர்கள். தேவையற்ற செலவுகளால் மனச் சஞ்சலம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்பு அமையும்.

மகரராசி காரர்களே:சந்திராஷ்டமம் இருப்பதால் சிலரின் விமர்சனங் களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். புதிய முயற்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும் உறவினர்கள் வருகையால் சங்கடம் ஏற்படும்..

கும்பராசி உறவுகளே: திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும்.ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்

மீனராசி நேயர்களே:நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகள் பணிந்துபோவார்கள்.பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். விருந்தி னர்கள் வருகை உண்டு. புதிய முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும். குடும்பம் தொடர்பாக எடுக்கும் முக்கிய முடிவு சாதகமாக முடியும்.தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!