பண பிரச்சனையால் சிக்கி தவிக்கும் செல்வராகவன்..! கை கொடுக்குமா என் ஜி கே.!?

தரமான படங்களை கொடுத்தவர் செல்வராகவன். நீண்டகாலமாக ஆளைக் காணவில்லையே என்று பார்த்தால், அவர் படங்கள் இயக்கிக் கொண்டு தான் இருக்கின்றார். அவருக்கு கிடைக்கும் தயாரிப்பாளர்கள் தான் பிரச்சனை. நெஞ்சம் மறப்பதில்லை, மன்னவன் வந்தானடி ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிவடைந்தும் பணப் பிரச்சனை காரணமாக பெட்டியினுள் முடங்கி இருக்கின்றது.இந்நிலையில் சூர்யாவை வைத்து இயக்கிய என்.ஜி.கே படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

மே 31 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா, சாய் பல்லவி, ராகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்க இருக்கும் படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளது. உத்தியோகபூர்வ அறிவித்தல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!