சளி உள்ளவர்கள் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம். இதனை செய்யுங்கள் சளி நீங்கிவிடும்..!

இப்போதெல்லாம் நோய்கள் நொடியில் தொற்றிக் கொள்ளும் இதற்கு காரணம் எம்மிடம் நோயெதிர்ப்பு சக்தி இல்லாதது தான். அதனால் நோய்கள் வந்தால் அவதானமாக இருப்பது முக்கியமாகிறது. அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது சளி பிடித்துவிட்டால் என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும்?

மற்றும் எப்படி சளியை விரட்ட வேண்டும் என்பது தான்.! புடலங்காய், வெள்ளரிக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், வாழைப்பழம், திராட்சைப் பழம், ஆரஞ்ச் பழம், ஆப்பிள் பழம், தயிர், பால், இப்படி இந்த உணவுகளை தவிர்ப்பது முக்கியம்.

இது ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் தொடவே கூடாது. அடிக்கடி ஜூஸ் குடிக்காமல் முடிந்த அளவு கொதித்தாறிய நீர் குடிக்க வேண்டும். சளியை விரட்ட… 1 கரண்டி இஞ்சி சாறு எடுத்து அதில் சிறிதளவு தேன் சேர்த்து காலை மாலை இரண்டு வேலை சாப்பிட்டால் போதும். சளி குறைந்துவிடும்.

அதே போல் அரை கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு கரண்டி இஞ்சி சாறு சேர்த்து அத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பகல் நேரத்தில் குடியுங்கள் சளி தொல்லை நீங்கிவிடும்..! இந்த தகவல் பிடித்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You might also like
error: Alert: Content is protected !!