ஸ்ரீலங்கா குண்டு வெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகை ராதிகா சரத்குமார்!

ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள Cinnamon grand விடுதியில் தங்கியிருந்த நடிகை ராதிகா சரத்குமார், குண்டு வெடிப்பு நிகழ்வதற்கு சற்று நேரத்திற்கு  முன்பதாக குறித்த நட்சத்திர விடுதியிலிருந்து வெளியேறியதாகவும், தான் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் தனது டுவிட்டர் கீச்சு மூலம் தெரிவித்துள்ளார். !!

ஸ்ரீலங்காவில் ஏற்கனவே இன்று சிலோன் நேரப்படி மதியத்திற்கு முன்பதாக, 6 வெவ்வேறு இடங்களில் தேவாலயங்கள், முக்கிய நட்சத்திர விடுதிகளில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம் பெற்றது, இதில் 180 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 470 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ள நிலையில், ஏழாவதாக தற்போது தெஹிவளை மிருக காட்சி சாலைக்கு அருகாமையில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சமீபமாக சற்று முன்னர் குண்டு வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.

தற்போது வரை, இலங்கையில் 9 வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பின் காரணமாக 190 பேர் உயிரிழந்திருப்பதாகவும் , 450 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் அறிய முடிகின்றது. தெஹிவளை மிருக காட்சி சாலைக்கு அருகில் உள்ள விடுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பொலிஸார் இருவரும் பலியானதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்திருக்கிறது.

இதே வேளை இச் சம்பவத்திற்கு எந்தவித அமைப்புக்களும் இது வரை உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளை உடனுக்குடன் பெற்றுக் கொள்ள மறக்காது எமது puradsifm முக நூல் பக்கத்துடன் இணைந்திருங்கள்!!

 

You might also like
error: Alert: Content is protected !!