8வது குண்டு வெடிப்பு தெமட்டகொடவில்? இலங்கையில் அவசரகால ஊரடங்கு இன்று மாலை 06 மணி முதல்

ஸ்ரீலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையினைக் கருத்திற் கொண்டு இன்று மாலை 06 மணியிலிருந்து நாளை காலை இலங்கை நேரப்படி 06 மணி வரைக்கும் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக இலங்கை பொலிஸ்மா அதிபர் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. பொது மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக அவர்களது இருப்பிடங்களில் இருக்குமாறும், வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவித்தல் விடப்பட்டுள்ளது.


இதே வேளை, இலங்கையின் மஹாவில உடயன பகுதியில் அமைந்துள்ள தெமட்டகொட Housing பகுதியில் மூன்று தொடர் குண்டு வெடிப்பு இடம் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. மேலதிக சேத விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.  நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் அனைத்து விதமான நடவடிக்கைகளிலும் பாதுகாப்புத் தரப்பினர் முனைப்போடு செயற்படுவதாகவும், கூடிய சீக்கிரமே இச் சம்பவத்துடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் பாதுகாப்பு அமைச்சக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத் தளங்களில் இச் சம்பவம் தொடர்பான வதந்திகள், உறுதிப்படுத்தப்படாத செய்திகளைத் தவிர்க்கும் வகையில் தற்பொழுது முதல் இலங்கையின் இணையப் பாவனை பூரண அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. மேலதிக விபரங்கள் வெகு விரைவில்!!

பாதுகாப்பு அமைச்சு கூட்டத் தொடருடன் தொடர்புடைய வீடியோ பார்க்க இங்கே க்ளிக் செய்யவும் 

You might also like
error: Alert: Content is protected !!