இலங்கை தொடர் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் முஸ்லிம் தீவிரவாதிகள்? உண்மை நிலை என்ன? 7 பேர் கைது!!

ஸ்ரீலங்காவில் இன்றைய தினம் 9 இடங்களில், இடம் பெற்ற குண்டுத் தாக்குதல்களில், 220 மக்கள் உயிரிழந்திருப்பதுடன், 500 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், இவர்களுள் 27 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவார்கள்.  மட்டக்களப்பில் உயிரிழந்தவர்களுள் 17 சிறுவர்களும் உள்ளடங்குவார்கள். இந் நிலையில், பல்வேறு ஊடகங்களாலும், முஸ்லிம் மக்களை மையப்படுத்தியும், இந்தத் தாக்குதலை மதத்துடன் தொடர்புடைய தாக்குதலாக காட்டும் வகையிலும் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றது.

தற்போது வரை இலங்கையின் அரச வட்டாரங்களிலிருந்து உத்தியோகபூர்வமாக எந்த ஓர் ஊடக அறிக்கையும் இந்தத் தாக்குதலின் சூத்திரதாரிகள் முஸ்லிம் தீவிரவாதிகள் தான் என உறுதிப்படுத்தும் செய்திகள் எவையும் வெளியாகவில்லை. இந்தத் தாக்குதல் ஓர் மதவெறித் தாக்குதலா? இதனையும் உறுதிப்படுத்தும் வகையில் எந்த வித தகவல்களும் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினாலோ, பாதுகாப்பு அமைச்சினாலோ வெளியிடப்படவில்லை.

ஊகங்களின் அடிப்படையில் முகநூல்களிலும், சில ஊடகங்களிலும் வெளியாகும் செய்திகள் தொடர்பில் மக்கள் அனைவரையும் விழிப்பாக இருக்குமாறு இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. சற்று முன்னர் இச் சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேரை கைது செய்திருப்பதாக இலங்கை பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் எந்த நோக்கத்திற்காக தாக்குதல் நடத்தினார்கள் என்பது தொடர்பாகவோ, அல்லது எந்த அமைப்பினைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பிலோ இதுவரை எந்த ஓர்  உறுதியான செய்திகளும் வெளியாகவில்லை.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

தற்போது வரை, தமிழக, சர்வதேச, மற்றும் சில வெளிநாட்டுத் தமிழ் ஊடகங்களால் வெளியிடப்படும் செய்திகள், புகைப்படங்கள் எவையுமே பாதுகாப்பு அமைச்சகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டவை அல்ல. இந்தத் தாக்குதலுடன் முஸ்லிம்களை தொடர்புபடுத்தி வெளியாகும் செய்திகள், முஸ்லிம் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நிகழ்த்தினார்கள் என வெளியாகும் செய்திகள் யாவுமே பொய்யானவை!!

தற்சமயம் வரை இலங்கையின் உத்தியோகபூர்வ செய்தித் தளங்கள், பாதுகாப்பு அமைச்சக ஊடக அறிக்கை எவற்றிலும் குறிப்பிட்ட ஓர் மதத்தினை / மதம் சார்ந்தவர்களை முன்னிலைப்படுத்தி எந்தச் செய்திக அறிக்கைகளும் வெளியிடப்படவில்லை. ஏமாற்றங்களைத் தவிருங்கள்!! விழிப்புடன் இருங்கள்!

பொய்ச் செய்தி பிரசுரித்து மன்னிப்புக் கோரிய அல்ஜசீரா ஊடகம் – விபரம் இங்கே 

தாக்குதல் இடம் பெற்ற சில மணி நேரங்களில், இலங்கை அரசாங்கம், பாதுகாப்பு அமைச்சகம் தாக்குதலின் பின்னணியில் யார் என்று செய்தி வெளியிட முன்பதாகவே, ISIS என்று செய்தி வெளியிட்ட One India ஊடகம்https://tamil.oneindia.com/news/colombo/sri-lankan-government-told-it-could-be-the-handiwork-of-islamic-terror-outfit-347587.html

முஸ்லிம் தீவிரவாதிகள் பின்னணி என அடித்துக் கூறும் One India செய்தி நிறுவனம் – இதோ விபரம்!! 

error: Alert: Content is protected !!