ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதி சமீமாவிற்கு மரண தண்டனை..!

ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைவதற்காக பிரித்தானியாவில் இருந்து சிரியாவிற்கு தப்பி ஓடியவர் சமீமா பேகம். இவரது குடும்பத்தினர் அனைவரும் பிரித்தானியாவில் இருந்த நிலையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமீமாவே இவ்வாறு சிரியா சென்று ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தார்.

இரண்டு வருடங்களின் பின் வீடியோவில் தோன்றிய சமீமா ஐ எஸ் அமைப்பின் உறுப்பினரை திருமணம் செய்துகொண்டதாகவும் தனக்கு குழந்தை ஒன்று இருப்பதாகவும் கூறினார். அத்துடன் பிரித்தானியாவில் வந்து வாழ விருப்பம் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் பிரித்தானியா அரசு சமீமா பங்களாதேஷ் குடியுரிமை பெற்றவர் என கூறி பிரித்தானிய குடியுரிமையை ரத்து செய்ததது. இதனை தொடர்ந்து பங்களாதேஷ் அரசு வெளியிட்டுள்ள செய்தியில் சமீமாவிற்கு பங்களாதேஷில் குடியுரிமை இல்லை என்றும் அவர் விண்ணப்பித்திருக்கவும் இல்லை என கூறியதுடன்.

பங்களாதேஷ் சட்டப் படி தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் நாட்டிற்குள் வந்தால் மரண தண்டனை வழங்கப் படும் சமீமா பங்களாதேஷ் வந்தால் நிச்சயம் அவருக்கு மரண தண்டனை வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளது..!

You might also like
error: Alert: Content is protected !!