இலங்கை முஸ்லிம் பெண்களின் குத்து நடனம் – உண்மையா? பொய்யா? இதோ வீடியோ!!

Fact Checked: ஸ்ரீலங்காவில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து, அதனைச் செய்தவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகள், இந்த தீவிரவாதிகளுக்கும், இஸ்லாமிய சமூகத்திற்கும் இடையில் தொடர்பேதும் இல்லை என்று சொன்னாலும், சில விஷமிகள் விடுவதாயில்லை.

இன நல்லிணக்கத்தினை சீர்குலைக்கும் வகையில் தமது விஷமத்தனமான செயற்பாடுகளை அவ்வப்போது சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

“முஸ்லிம் பெண்களின் உடையுடன்” பெண்ணொருவர் உட்கார்ந்திருக்க, அவரைச் சுற்றி நின்று பல பெண்கள் நடனமாடும் காணொளி முகநூலில் வைரலாகி வருகின்றது.

பல்வேறு முக நூல் குழுமங்களில் இந்தக் காணொளி இலங்கை முஸ்லிம் பெண்களின் ஆபாச நடனம் எனும் தலைப்புடன் பகிரப்பட்டு வருகின்றது.

இதன் உண்மைத் தன்மையினை நம் செய்திப் பிரிவினர் ஆராய்ந்தார்கள். இந்தக் காணொளி இலங்கையில் எடுக்கப்பட்ட காணொளி அல்ல. குறிப்பிட்ட ஓர் சமூகத்தின் மீது சேறு பூசும் வகையில் விஷமிகளால் பரப்படும் “இஸ்லாமிய உடையணிந்த, இஸ்லாம் மதம் சாராத” பெண்களின் காணொளியே இது. இந்தியாவில் இந் நடனம் இடம் பெற்றுள்ளது.

இக் காணொளி இலங்கை முஸ்லிம்களின் காணொளி என்று சொல்லப்படுவது பொய்யே. இக் காணொளியைப் பார்த்துக் கொண்டு நிற்கும் சிறுவர்கள் அனைவரும் முஸ்லிம்களின் உடை அணியாது உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like
error: Alert: Content is protected !!