பள்ளிகள் மீது தாக்குதல் நடத்தினால் , இலங்கை போர்க்களமாகும் என அதிரடியாய் பேசிய மௌலவி கைது!!

வவுனியா செட்டிக் குளம் பகுதியை சேர்ந்தவரான மெளலவி முனாஜிப் என்பவரை இன்று விமான நிலையத்தில் வைத்து புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் 21ம் திகதி இலங்கையில் நடந்த தீவிர வாத தாக்குதலை பலரும் எதிர்த்து வந்த நிலையில்

மெளலவி முனாஜிப் என்பவர் ஆதாரித்து பேசியது முஸ்லீம்கள் உட்பட பலருக்கும் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போல் இருந்தது.தேசிய தெளஹீத் அமைப்பு செய்தது போல் நாமும் செய்ய வேண்டி வரும் என்ற ரீதியில் பள்ளிகள் மீது தாக்குதல் நடத்தினால் இலங்கை போர்களம் ஆகும் என வீடியோ பதிவிட்டிருந்தார்.

இவர் தொடர்பான தகவலை தேடிய பொலீஸாருக்கு அவர் இலங்கையை விட்டு சென்றிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இன்று இலங்கை வந்த முனாஜிப் மெளலவியை விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.

இவரது சொந்த வாழ்க்கையும் சர்ச்சையானதாக இருப்பதாக ஏற்கனவே வவுனியாவை சேர்ந்த முஸ்லீம்கள் தெரிவித்துள்ள நிலையில் பொது வாழ்விலும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

You might also like
error: Alert: Content is protected !!