திருமணமான ஒரே நாளில் கடத்தப் பட்ட மணப்பெண்..! கடத்தியது யார்.?

திருமணமான அடுத்த நாளே மணப்பெண் கடத்தப் பட்ட சம்பவம் ஒன்று ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வினிதா என்ற பெண்ணுக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணமான அடுத்த நாள் கணவன் மனைவி காரில் சென்றுகொண்டிருந்த போது தம்பதியினரின் காரில் வேறு ஒரு கார் வந்து மோதியது.

உடனடியாக தம்பதியினர் கீழே இறங்கிய போது மாப்பிள்ளையை அடித்து உதைத்த நான்கு பேர் கொண்ட குழு வினிதாவை கடத்திச் சென்றது. உடனடியாக பொலீஸுக்கு தகவல் கொடுக்கப் பட்ட நிலையில் தேடுதலில் வினிதாவின் முன்னாள் காதலனான ஜின்கர் என்பவர் தான் கடத்தியுள்ளது தெரியவந்தது.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

இந்த நிலையில் வினிதா முன்னாள் காதலனுடன் ஓடி போய் விட்டதாக செய்திகள் பரவியது. இந்த நிலையில் ஜெய்ப்பூரில் வீடொன்றில் வைத்து வினிதா மற்றும் நால்வரை பொலீஸார் கைது செய்து விசாரித்த போது கணவரை அடித்து தன்னை கடத்தி சென்றதாக கூறியுள்ள அவர் காதலித்தது உண்மை என்றும்

காதலனின் குணம் பிடிக்காததால் விலகியதாக கூறிய அவர் கணவனுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக பொலீஸில் கூறியுள்ளார்..இவர்களை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது கணவருடன் செல்ல விருப்பம் இல்லை எனவும் பெற்றோருடன் செல்லப் போவதாகவும் கூறினார்.

இதனை தொடர்ந்து வினிதாவை தொண்டு நிறுவனம் ஒன்றில் சேர்க்கும் படியும் மன நிலை மாறும் வரை அவருக்கு அமைதி தேவை படுகிறது எனவும் நீதி மன்றம், அதனால் தொண்டு நிறுவனத்தில் சேர்க்கும் படியும் கூறியுள்ளது..! உத்தரவிட்டுள்ளது.

error: Alert: Content is protected !!