ஒரே வைத்தியசாலையில் இறந்த இரண்டு பெண்களின் சடலத்திற்கு நடந்த கொடுமை..!

இந்தியாவில் ஒரே வைத்தியசாலையில் இறந்த இரண்டு பெண்களின் சடலம் மாறிய விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது.

நஷ்ரீன் பாணு என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதே வைத்தியசாலையின் ஜாதவ் என்ற பெண்ணும் ஒருதலையாக காதலித்த இளைஞருக்கு மறுப்பு தெரிவித்ததால் கத்தியால் குத்தியதால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இருவரும் இறந்துள்ள நிலையில் இருவரது சடலத்தையும் வைத்தியசாலை பணியாளர்களால் மாற்றிக்கொடுக்கப் பட்டுள்ளது. இரு வீட்டிலும் சடலம் அடக்கம் செய்யப் பட்டதன் பின்னர் சடலம் மாறிய விடயம் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து இரு வீட்டாரும் வைத்தியசாலையில் போராட்டம் நடத்தியுள்ளனர். அதன் பின் பொலீஸாரின் உதவியுடன் சடலங்கள் தோண்டி எடுக்கப் பட்டு வைத்திய பரிசோதனையின் பின் மீண்டும் புதைக்கப் பட்டுள்ளது. இரண்டு சடலங்களும் இரண்டு மதச் சடங்குகளில் புதைக்கப் பட்டுள்ளது..!

இது தொடர்பாக வைத்திய சாலை நிர்வாகத்தின் சிலரை பணி நீக்கம் செய்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது..!

You might also like
error: Alert: Content is protected !!