இலங்கையில் பள்ளிவாசலை தகர்க்கும் படி வன்முறையாளர்களுக்கு சைகை காட்டிய இராணுவம்..? வைரலாகும் சிசிடிவி காட்சிகள் இதோ..!

இலங்கையில் கடந்த 21ம் திகதி இடம்பெற்ற தீவிர வாத தாக்குதலை தொடர்ந்து நாட்டின் பல பக்கங்களிலும் வன்முறை வெடித்துக் கொண்டிருகின்றது. கடந்த வாரம் நீர் கொழும்பில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் முஸ்லீம் மக்களின் வாகனங்கள் வீடுகள், உடைக்கப் பட்டது.

அதனை தொடர்ந்து குளியாப்பிட்டிய, குருனாகலை, கம்பஹா, புத்தளம் போன்ற இடங்களில் பள்ளி வாசல்கள், வீடுகள், வர்த்தக தளங்கள் அடித்து உடைக்கப் பட்டதுடன் மூன்று பேர் மரணமடைந்தனர்.

இந்த நிலையில் நாத்தாண்டிய இயலமோதர பகுதியில் நேற்றைய தினம் தகர்க்கப் பட்டது. இது இராணுவத்தினரின் பாதுகாப்புடன் அவர்களின் வழி காட்டலின் படி பள்ளி வாசல்களை தகர்த்து இருப்பது குறித்த வீடியோக்களில் தெரிய வந்துள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் பள்ளி வாசல்கள் அடித்து நொருக்கப் பட்டதுடன்.. இராணுவ வீரர் ஒருவர் தாக்குதல் நடத்தும் படி சைகை காண்பிப்பது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதோ வீடியோ..! நன்றி ஐபிசி தமிழ் ஊடகம்.

Video Credits IBC Tamil Media

You might also like
error: Alert: Content is protected !!