இந்தியாவில் இருந்து அறுவை சிகிச்சைகாக துபாய் சென்ற பெண் மரணம்.! கதறி அழும் பெற்றோர்..!

அழகிய இந்திய பெண் ஒருவர் அறுவை சிகிச்சையால் மரணமடைந்துள்ளது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிறக்கும் பொழுதே இடுப்பு எலும்பு இடம் மாறி இருந்துள்ளது. இதனை குழந்தையில் சத்திர சிகிச்சையின் மூலம் சரி செய்தால் ஆபத்து ஏற்படும் என கருதியதால் பெற்றோர் விட்டுவிட்டனர்.

ரீட்டா பெர்னாண்டஸ் என்ற இறந்த பெண்ணுக்கு தற்போது வயது 42. திருமணமாகி இரண்டு குழந்தைக்கு தாயான இவர் தனது இடுப்பு எலும்பை சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என கணவர் மற்றும் பெற்றோர்களிடம் ஆலோசனை செய்துள்ளார். அதன் படி மும்பையில் இருந்து துபாய் சென்ற இவர்கள்

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

“அல் சஹாரா மருத்துவமனையில் இது குறித்து மருத்து ஆலோசனைகளை பெற்றுள்ளனர். இந்த அறுவை சிகிச்சை பற்றிய அனைத்தையும் தெளிவு படுத்திய பின் ரீட்டாவை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளனர். 2 மணி நேர போராட்டத்தின் பின் ரீட்டா இறந்து விட்டதாக குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர்.

இது குறித்து ரீட்டாவிற்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் மொஹாமீம் அப்தல்ஹானி கூறுகையில் இந்த சிகிச்சை பற்றி குடிம்பத்தினரிடம் தெளிவு படுத்தினோம், அதன் பின் நாமும் முடிந்த அளவு முயற்சி செய்தோம் ஆனாலும் தோற்றுவிட்டோம் என கூறியுள்ளார். இது தொடர்பாக ரீட்டாவின் கணவர் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது..!

error: Alert: Content is protected !!