இலங்கையில் வெளிநாட்டு இராணுவமா.? வைரலாகும் பகீர் புகைப்படங்கள்..!

இலங்கையில் அனைத்து பகுதிகளிலும் பதற்றமான சூழ்நிலை காணப் படுகின்றது. கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வந்து தாக்குதல் நடத்தப் பட்டது. இதில் ஏராளமான உயிர்கள் பறிபோனது.

இதனை தொடர்ந்து நீர்கொழும்பு, குளியாப்பிட்டிய, புத்தளம், குருனாகலை, கம்பஹா போன்ற பிரதேசங்களில் வன்முறைகள் வெடித்தது. இதில் முஸ்லீம்களின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்ததுடன் மூவர் மரணமடந்தனர். நாட்டில் பல இடங்களில் கைது நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

இதில் தற்போது தீவிரவாத சந்தேகத்தின் பேரில் வெலிகந்த புகையிரத நிலையத்தில் நபர் ஒருவர் கைத்து செய்யப் பட்டுள்ளதாகவும் அவரை கைது செய்யும் படையினரில் இரண்டு வெளி நாட்டவர் இருப்பதாகவும் ஐ பி சி இணையத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக குறித்த இணையம் குறிப்பிட்டுள்ளதாவது இலங்கை இராணுவவத்தினருக்கு விஷேட பயிற்சி அளித்துவரும் அமெரிக்காவின் “சீல்ஸ்” அமைப்பினரின் ஆடை போல் குறித்த படையினரின் ஆடை உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப் பட்டவர் யார் என்ற விபரம் வெளியாகவில்லை.!

error: Alert: Content is protected !!