நடிகர் பிரசன்னாவிற்கு என்னாகிற்று..? அழகாகவும் பிட்னஸுடனும் இருந்த இவர் இப்படி ஆகிவிட்டாரே..!? புகைப்படத்தை பாருங்கள் நீங்களும் ஷாக் ஆகுவீங்க..!

நடிகர் பிரசன்னா. ..5 ஸ்டார் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த இவர் பல மொழி திரைப்படங்களை நடித்து முடித்துவிட்டார். 1982 ஜூலை 28ம் திகதி பிறந்த நடிகர் பிரசன்னா தனது 20வது வயதில் திரை துறைக்கு அறிமுகமானார்.

5ஸ்டார். ரகசியமாய்,காதல்.கொம், அழகிய தீயே, கஸ்தூரி மான், கண்ட நாள் முதல், சீனா தானா 001, சாது மிரண்டால், போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்தவர் திடீரென அஞ்சாதே திரையில் வில்லனாக தோன்றினார். இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

அத்துடன் பெஸ்ட் வில்லனுக்கான ITFA விருது வழங்கப் பட்டதுடன் பெஸ்ட் சப்போர்ட் அக்டருக்கான பில்ம் பேர் அவார்டும் பரிந்துரை செய்யப் பட்டது. இப்படி திரைப்படத்திற்கு திரைப்படம் வித்தியாசம் காட்டி நடித்த பிரசன்னா நடிகை சிரிப்பழகி சினேகாவை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு விகான் என்ற ஆண் குழந்தையும் உண்டு. நடிகர் பிரசன்ன தனது பிட்னஸில் அதிகம் கவனம் செலுத்துவார். உடற்பயிற்சிக்காக அதிக நேரம் செலவிடுவார்.ஆனால் வெளியாகியுள்ள ஒரு புகைப்படம் இவரா அவர் என கேட்க வைத்துள்ளது.

தொப்பை வயிறு கண்ணாடி, நரைத்த தலை என முற்றிலும் மாறுபட்ட தோன்றத்தில் இருக்கிறார். என்னாச்சி இவருக்கு என தேடிப் பார்த்த போது வெப் சீரிஸில் நடிக்கிறாராம். இது தான் இந்த தோற்றமாம். !

You might also like
error: Alert: Content is protected !!