சினிமாவில் வாய்ப்பு கேட்பதற்காக 13 வயதில் நடிகை குஷ்பு எடுத்த வேற லெவல் புகைப்படம்..! அப்பவே முயல்குட்டி போல் இருக்காங்களே..!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கோயில் கட்டி கும்பிடப் பட்ட பிரபல நடிகை தான் குஷ்பு. எத்தனையோ நடிகைகள் தமிழ் சினிமாவில் கலக்கி இருந்த போதும் நடிகை குஷ்புவின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை.

எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் தனது சிறப்பான நடிப்பால் மக்களை கவர்ந்து விடுவார். நாயகி, அக்கா, அண்ணி, அம்மா, என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து விட்ட குஷ்பு சின்னத்திரையிலும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

நடிப்பு அரசியல் இரண்டிலும் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்ட குஷ்பு, டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இயக்குனர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து இரண்டு பெண்களுக்கு தாயான போதும் குஷ்புபுவின் அழகும் ஸ்டைலும் இன்னும் குறையவே இல்லை.

இந்த நிலையில் தான் 13 வயதில் அதாவது சினிமா வாய்ப்புக்காக அவர் முதல் முதல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நான் 13 வயதில் எவ்வளவு அழகு என கேட்டு நடிகை குஷ்பு இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நாங்க வேறென்ன சொல்லப் போகிறோம் குஷ்பு மேம் நீங்க அப்போ கொள்ளை அழகு இப்போ வேற லெவல்..

You might also like
error: Alert: Content is protected !!