காதலித்து திருமணம் செய்த கணவரை கல்லால் அடித்துக் கொலை செய்த மணப்பெண். .! தமிழ் நாட்டில் அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தில் காதலித்து திருமணம் செய்த கணவரை கல்லால் அடித்து கொலை செய்ய சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை தலைசங்கக் கோட்டையை சேர்ந்தவர் சதீஷ் குமார். இவரும் கலைமதி என்ற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

பின்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்தனர். கடந்த 5மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் பெற்றோர் சிறப்பான முறையில் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் திருமணமான முதல் வாரமே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட தொடங்கியது.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

காதலித்து திருமணம் செய்த போதிலும் அடிக்கடி சண்டை தான் வீட்டில். இதனால் கலைமதி கணவரை பிரிந்து சில நாட்கள் இருந்தார். ஆனால் விடாத சதீஷ்குமார் கலைமதியிடம் சென்று தகராறு செய்ய ஆரம்பித்தார்.

இதில் கோபமடைந்த கலைமதி அருகில் இருந்த கல்லை எடுத்து கோபம் தீரும் வரை சதீஷ்குமாரை தாக்கியுள்ளார். அந்த இடத்திற்கு வந்த கலைமதியின் பெற்றோர் சதீஷை கத்தியால் குத்தியுள்ளனர். தாக்குதலுக்கு ஆளான சதீஸ் குமார் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

அப்பகுதி மக்கள் பொலீஸாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து கலைமதி குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்த பொலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். !

error: Alert: Content is protected !!