கொழும்பு புறக்கோட்டை பகுதியில் சற்று முன்னர் தீ விபத்து..!

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் சற்றுமுன்னர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் புறக்கோட்டை மெனிக் பொலயில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த பகுதியில் உள்ள அனைவரும் இணைந்து சில மணி நேரத்திற்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக அறிய முடிகிறது.

இந்த தீ விபத்து ஏற்பட்டதன் காரணம் இது வரை தெரியவில்லை. எவ்வாராயினும் உயிர் சேதமோ பெரிய அளவிளான சொத்துக்களுக்கோ சேதங்கள் ஏற்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன..!

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!
error: Alert: Content is protected !!