பெற்றோரால் தீயில் கருகி உயிரிழந்த 16 வயது சிறுமி..! இந்தியாவில் அரங்கேறிய கொடூரம்..!

பெற்றோர் செய்த செயலால் 16 வயது சிறுமி தீயில் கருகி மரணித்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் தாதர் அருகே உள்ள பகுதியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. 16 வயதான ஷரவானி சவான் என்ற சிறுமியே இவ்வாறு பலியாகி உள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை திருமணம் ஒன்றிற்கு பெற்றோர் செல்ல வேண்டி இருந்ததால் ஷரவானியை அறை ஒன்றில் போட்டு பூட்டியுள்ளனர். தாங்கள் வரும் வரை படிக்கும் படி கூறிவிட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் குறித்த வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

பூட்டப் பட்ட அறையில் இருந்து சிறிமியால் வெளியே வர முடியாமல் துடித்துள்ளார். அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு படையினருக்கு அறிவித்ததை தொடர்ந்து மூன்று மணி நேர போராட்டத்தின் பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப் பட்டது.

உடல் முழுவதும் தீக் காயங்களுடன் மீட்கப் பட்ட ஷரவானி சவான் வைத்தியசாலை எடுத்துச் செல்லும் வழியில் இறந்துள்ளார். இது விபத்தா அல்லது திட்டமிடப் பட்ட கொலையா என பொலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்..!

You might also like
error: Alert: Content is protected !!