இன்றைய ராசி பலன் 15.05..2019

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம். 15-05-2019, வைகாசி 01, புதன்கிழமை, ஏகாதசி திதி பகல் 10.36 வரை பின்பு வளர்பிறை துவாதசி. உத்திரம் நட்சத்திரம் காலை 07.16 வரை பின்பு அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 05.41 வரை பின்பு சித்திரை. அமிர்தயோகம் காலை 07.16 வரை பின்பு மரணயோகம் பின்இரவு 05.41 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-

மேஷராசி நேயர்களே:எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசால் அனுகூலம் உண்டு. தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகம் ஏற்படும்.வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

ரிஷபராசி அன்பர்களே:உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும்.

மிதுனராசி காரர்களே: தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியம் முடியும்.வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிட்டும்.

கடகராசி நேயர்களே: இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும்.அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள்.வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பணம் கொடுக்கல் – வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

சிம்மராசி அன்பர்களே:பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். முக்கியமான முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்கவேண்டாம். பங்குதாரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம்.

கன்னி ராசி காரர்களே: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கணவன் – மனைவிக்கிடையே சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். சின்ன சின்ன பிரச்னைகள் குடும்பத்தில் தலைத்தூக்கும்.உடல்நிலை சுறுசுறுப்பாக இருக்கும். சுபசெலவுகள் ஏற்படும்.

துலாராசி உறவுகளே:கோபத்தை குறைத்து எந்த செயலிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். வாகனத்தில் கவனம் தேவை.சக வியாபாரிகளால் மறைமுக தொல்லைகள் ஏற்படக்கூடும். கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள்.

விருச்சிகராசி நேயர்களே:பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சகோதர வகையில் உதவிகள் உண்டு.குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு.கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.

தனுசுராசி அன்பர்களே:சகோதரர்கள் வகையில் அலைச்சலுடன் ஆதாயமும் இருக்கும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். உடல்நிலையில் சிறு உபாதைகள் ஏற்படும்.பெற்றோரின் ஆதரவுப் பெருகும்.உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

மகரராசி காரர்களே:வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதம் ஏற்படும்.உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் விலகும்.

கும்பராசி உறவுகளே:சந்திராஷ்டமம் நீடிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை தோன்றும்.தேவையற்ற அலைச் சலுக்கு ஆட்படுவீர்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள்.உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. கணவன் – மனைவிக்கிடையில் வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

மீனராசி நேயர்களே:சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.தந்தை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். சின்ன சந்தர்ப் பங்களையும், வாய்ப்புகளை யும் பயன்படுத்திக் கொள்வீர் கள்.

error: Alert: Content is protected !!