நகச் சுத்தியா.? விரல்களில் சொத்தையா.? இதோ தீர்வு தயார்.! அதிகம் பகிருங்கள்..!

அப்பப்பா…நோய்கள் என்று பார்க்கப் போனால் தலைமுடி தொடக்கம் விரல் நகை வரை உள்ளதே என நினைக்கத் தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும் பல நோய்களுக்கு குறிப்பு கொடுத்துவிட்டு திரும்பி பார்க்கையில் மீண்டும் புதிதாக ஒரு நோய் இருக்கிறது

இன்று நாம் கிராமமோ நகரமோ என் ஆட்சி எல்லா இடத்திலும் இருக்கும் என்று சொல்லக் கூடிய ஒரு நோயைப் பற்றித் தான் ஆம் நகச்சுத்தி இது பொதுவாக எல்லோருக்கும் வரும் ஒரு நோய் தான். நகத்தின் அருகில், நகத்திற்குள் என இந்த நகச் சுத்தி ஒவ்வொருவரையும் இலகுவாக தாக்குகின்றது.

அப்படி நகச் சுத்தி வந்தவுடன் நாம் செய்யும் வேலை எலுமிச்சை ஒன்றை எடுத்து நெருப்பில் காட்டி அதை ஓட்டை போட்டு கையில் போட்டுக் கொள்வோம். சாதாரணமாக அதற்கு குணமாகினாலும் எங்காவது செல்லும் போது எலுமிச்சையை கையில் போட்டுச் செல்ல முடியுமா என்ன?

இதற்கு இலகுவாக ஒரு குறிப்பு சொன்னால் வேண்டாம் என்று சொல்லவா போறீங்க இல்லை தானே.? பெரிதாக எதுவும் தேவை இல்லை விளக்கெண்ணெய் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளுங்கள் அதனுடன் கஸ்தூரி மஞ்சள் அரை டீஸ்பூன் விட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

நகச் சுத்தி உள்ள இடத்தில் பூசி விடுங்கள். அவ்வளவு தான். அத்துடன் இந்த நகச்சுத்தி தொல்லை தீர்வதுடன் மீண்டும் வரவே வராது.!

You might also like
error: Alert: Content is protected !!