கமலஹாசன் மீது செருப்பு வீசிய இளைஞனுக்கு பொன்னாடை போர்த்திய பிரபலம்..!? வைரலாகும் புகைப்படங்கள்..!

கடந்த வாரம் எமது நாட்டின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து என கூறிய கமலஹாசன் எமது தேச தந்தை மஹாத்மா காந்தி அவர்களை கொலை செய்தது நாதுராம் கோட்சே என்ற தீவிரவாதி என பொது மேடையில் பேசி இருந்தார். இதற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் கமலஹாசன் மீது பாஜகவை சேர்ந்த சிலர் செருப்பு மற்றும் முட்டைகளை வீசி அடித்தனர்.

இது தொடர்பாக சிலரை கைது செய்த பொலீஸார் பின் விடுதலை செய்தனர். இந்த நிலையில் நடிகர் கமலஹாசன் மீது செருப்பு வீசிய இளைஞருக்கு பாஜக எச் ராஜா பொன்னாடை போர்த்தி பாராட்டியுள்ளார்.

இதனை பார்த்த நடிகை காயத்திரி ரகுராம் இது நல்ல விடயம் அல்ல. கமலஹாசன் செய்தது தவறு அதற்கு என் எதிர்ப்பும் உண்டு அவரை சட்டம் தண்டிக்க வேண்டும். ஆனால் செருப்பை வீசிய நபரை கெளரவம் செய்வது நல்ல விடயம் அல்ல என பதிவிட்டுள்ளார்.!

வேலை வாய்ப்பு!!

புரட்சி வானொலியின் தமிழக செய்திச் சேவைக்கு பணியாளரைத் தேடுகின்றோம். இந்த தகமைகள் உங்களிடம் இருக்கா? ஏன் தாமதம், இப்பொழுதே விண்ணப்பியுங்கள்.

* வீட்டில் இருந்தவாறே பணி புரியலாம்.

* கணினி மற்றும், அதி வேக இணைய வசதி அவசியம்

* தமிழில் ஒரு நிமிடத்திற்கு 30-45 சொற்கள் வழுவின்றி தட்டச்சு செய்யும் தகுதி இருத்தல் அவசியம்

* கணினி அறிவும், Photo Editing – Photo Shop தெரிந்திருத்தல் அவசியம்.

* சம கால அரசியல், சினிமா மற்றும் மருத்துவம் , தொழில்நுட்பம் உள்ளிட்ட பத்திரிகைத் துறை சார் விடயங்கள் நன்கு அறிந்திருத்தல் அவசியம்.

* எழுத்தார்வம், விமர்சனம் எழுதும் திறன் அவசியம் இருத்தல் வேண்டும்.

* சமூக வலைத் தளங்கள், இணையம் , செய்தி இணையம் பற்றி நன்கு பரிச்சயம் உள்ள நபராக இருத்தல் அவசியம்.

இந்தத் தகமைகள் அனைத்தும் உங்களிடமிருந்தால், இப்பொழுதே உங்கள் சுய விபரக் கோவையினை அழகு தமிழில் வடிவமைத்து puradsifm@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.

தகுதியான, திறமையுள்ள தெரிவு செய்யப்பட்ட நபருடன் நாம் தொடர்பு கொள்கின்றோம்.

நேர்முகத் தேர்வு நடை முறை,

தொலைபேசி மற்றும் காணொளி தொடர்பாடல் மூலம் நேர்முகத் தேர்வு இடம் பெறும்.

நல் வாழ்த்துகள்!!

You might also like
error: Alert: Content is protected !!