பெற்றோர் கட்டாயபடுத்தியதால் தற்கொலை செய்துகொண்ட 21 வயது இளம்பெண்..

பெற்றோர் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் 21 வயது கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சின்னஒபுளாபுரம் பகுதியில் நடந்துள்ளது. கும்மிடிப்பூண்டி அருகே சின்னஒபுளாபுரத்தை சேர்ந்த குமரேசன் என்பவரின் மகள் ஆர்த்தி வயது 21.

பொறியியல் படித்து முடித்துவிட்ட ஆர்த்தியை பெற்றோர் திருமணம் செய்துகொள்ளும் படி கூறியுள்ளனர். ஆனால் ஆர்த்தியோ திரும வேண்டாம் என கூறி உள்ளார் கேட்காத பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதனால் சோகத்தில் இருந்த ஆர்த்தி நேற்றைய தினம் மின் விசிரியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். உறவினர்கள் வைத்தியசாலை எடுத்துச் சென்ற போது அவர் மரணித்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ள நிலையில் பொலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்..!

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!