தற்கொலை தாக்குதல் நடந்திய தீவிரவாதி சஹ்ரானுக்கு நினைவு தூபி..!?

இலங்கையில் தற்கொலை தாக்குதல் இடம்பெற்று நாளையுடன் ஒரு மாதம் ஆகிறது. இது வரை தற்கொலை தாக்குதலுடன் தொடர்பு பட்டவர்கள் 89 பேரை கைது செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இன்னும் நாட்டில் பதற்றம் தனியவில்லை.

ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் கைதுகளும் இடம்பெற்றுக் கொண்டே தான் இருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள கருத்து அனைவரையும் பதற வைத்துள்ளது.

நாட்டில் தற்போது உள்ள சட்டத்தின் படி இறந்தவர்களுக்கு நினைவு தூபி வைக்க முடியும் அதே போல் நினைவேந்தல் நிகழ்ச்சிகளும் நடைபெற முடியும்..இந்த சட்டம் ஜனாதிபதியால் கொண்டு வந்த போது நாம் எதிர்த்தோம் ஆனால் ஜனாதிபதி அதனை செவிமடுக்கவில்லை.

அந்த சட்டத்தின் படி இறந்த சஹ்ரான் மற்றும் அவனது தோழர்களுக்கு சஹ்ரானின் உறவினர்கள் நினைவு தூபி கட்டி நினைவேந்தல் நடத்தினால் அரசு கட்டயமாக ராணுவ பாதுகாப்பு வழங்க வேண்டும். இது போன்ற சட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது.

பேஸ்புக்கில் Like செய்ய!!

நீங்கள் மீண்டும் இந்த அரசை கொண்டு வர நினைத்தால் அடுத்து சஹ்ரானுக்கு நினைவு தூபி வைத்து நினைவேந்தல் நிகழ்ச்சி இடம் பெறும் என்பது உறுதி என தொடர்ந்தும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.!

error: Alert: Content is protected !!