இந்தியாவிற்கு தங்க பதக்கம் பெற்றுக் கொடுத்த கோமதி மாரிமுத்துவிற்கு இடைக்கால தடை..! பதக்கமும் பறிமுதல் செய்யப் படும் அபாயம்..!

தங்க மங்கை என அண்மைகாலமாக பலர் கொண்டாடிவரும் கோமதி மாரிமுத்துவின் தங்கம் பறிமுதல் செய்யப் படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் கத்தாரில் இடம்பெற்ற 23 வது ஆசிய தடைகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 2.70 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடிந்த இந்திய தடைகள வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்க பதக்கத்தை வென்றார்.

ஏழை குடும்பத்தில் பிறந்து ஏகப் பட்ட துயரங்களை அனுபவித்து இந்தியாவிற்கு தங்கத்தை எடுத்து வந்த கோமதியை பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்தினார்கள் சிலர் உதவிகளும் செய்தனர். இந்த நிலையில் கோமதி மாரிமுத்து தடை செய்யப் பட்ட அனபாலிக் ஸ்டெராய்டான நார் ஆண்ட்ரோஸ்டேரோன் என்ற ஊக்க மருந்தை

எடுத்துக் கொண்டதாக ஆங்கில செய்தித் தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஊக்க மருந்து சோதனையில் கோமதி மாரிமுத்துவிற்கு “பாசிடிவ்” வந்திருப்பதாக குறித்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்திய தடகள அமைப்பின் அதிகாரி கூறியபோது

கோமதியின் முதல்கட்ட பரிசோதனையில் பாசிடிவ் வந்துள்ளது உண்மை என கூறியுள்ளார். இது குறித்து கோமதி மாரிமுத்து கூறுகையில் நான் எந்த ஒரு ஊக்க மருந்தும் எடுத்துக் கொள்ளவில்லை… மற்றும் நான் சுத்திகரிப்பட்ட நீரை மட்டுமே அருந்தினேன் என் கனவு இது இதில் நான் எந்த தவறும் செய்யவில்லை என கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

கோமதியின் சகோதரனும் இந்த குற்ற சாட்டை முற்றிலும் மறுத்துள்ளார். இந்த நிலையில் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள கோமதி மாரிமுத்துவிற்கு இடைக்கால தடை விதிக்கப் பட்டுள்ளது…தற்போது அவரது பதக்கமும் கேள்விக் குறியாகி உள்ளது..!

error: Alert: Content is protected !!