தெரு விளக்கில் படித்த ஏழை சிறுவனுக்கு பறந்து வந்த அதிர்ஷ்டம்..!

ஒருவரின் கஷ்டத்தை கண்டு உதவுகின்றவரே உண்மையான பணக்காரர் என்ற வார்த்தைக்கு அமைய நபர் ஒருவர் உதவிய விடயம் வைரலாகி உள்ளது. பெரு நகரத்தை சேர்ந்த சிறுவன் மார்டின் விக்டர் படிப்பில் சிறந்தவனாக இருந்துள்ளான்.

ஆனால் வீட்டில் போதிய வசதி இல்லை. தெருவோர மின் விளக்கின் ஒளியில் குறித்த சிறுவன் தினமும் படிப்பதை கண்ட நபரொருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாக தொடங்கியுள்ளது.

இதனை பார்த்த பஹ்ரைன் நாட்டு கோடீஸ்வரர் ஒருவர் மார்டின் விக்டருக்கு உதவுவதற்காக உடனடியாக பெரு வந்துள்ளார். அங்கு விக்டரின் இருப்பிடத்தை தேடி பிடித்து அங்கு சென்று குழந்தையை பாராட்டியதுடன் அவர்களது வீட்டிற்கு மின்சார் வசதி மட்டும் இன்றி வீட்டினை சீர் செய்யவும் உதவியுள்ளார்.

படிப்பு பொறுப்பையும் பஹ்ரைன் நாட்டை சேர்ந்த மொஹெமட் யூசுப் என்ற குறித்த நபரே பொறுப்பேற்றுள்ளார்..!

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!