முஸ்லிம்களை வேட்டையாடத் துடிக்கும் பௌத்த சிங்கள பேரினவாதம்!! தமிழர்களே விழிப்பாக இருங்கள்!!

இலங்கையில் கடந்த சில நாட்களாக நடந்த விடயங்கள் சிறுபான்மை மக்களை பெரிதும் பாதித்துள்ளது. கடந்த மாதம் 21ம் திகதி இலங்கையில் தொடர் தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றது. இந்த தாக்குதலில் 250திற்கு மேற்பட்டோர் கொல்லப் பட்டனர்.

நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்த நிலையில் இன்றளவும் பலர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். குறித்த தாக்குதலில் அதிகம் மரணமடைந்தது தமிழ் கத்தோலிக்க மக்களே. ஆனால் கத்தோலிக்க மக்கள் அமைதியாக இருந்தனர்.

தாக்குதல் நடத்தியது இஸ்லாம் மதத்தை சேர்ந்த தீவிரவாதிகள். இந்த நிலையில் இதனை சாட்டாக கொண்ட பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை மக்களை பழி வாங்க ஆரம்பித்தனர். 2009 ம் ஆண்டு ஒட்டுமொத்த தமிழர்களையும் அழிக்க சிங்கள அரசுக்கு உதவிய முஸ்லீம் மக்கள் இம்முறை குறிவைக்கப் பட்டனர்.

தீவிரவாத தாக்குதலை காரணமாக வைத்து ஆங்காங்கே கலவரங்கள் வெடித்தது.முஸ்லீம்களின் சொத்துக்கள் சேதமாக்கப் பட்டதுடன் உயிர் சேதமும் ஏற்பட்டது. அதன் பின் முஸ்லீம் அமைச்சர்கள் மீது பார்வை திரும்பியது. பதவி விலக கோரி அத்துரலிய ரத்ன தேரரால் உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்றது.

பேஸ்புக்கில் Like செய்ய!!

இதில் ஆட்டம் கண்ட அரசு மூன்று அமைச்சர்களை பதவி விலக கூற நல்லிணக்க அரசில் இருந்த 9 அமைச்சர்கள் பதவி விலகினார்கள். இது நாட்டிற்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் சிறுபான்மை இனத்தினருக்கு சோக செய்தியே.

ஒரு தேரரின் உண்ணாவிரதத்தினால் ஒரு சமூகத்தை ஓரம்கட்ட முடியும் இந்த நாட்டில். அன்று முஸ்லீம்கள் சிலர் அப்பாவி தமிழ் மக்களை அழிக்க உதவியது, இன்று முஸ்லீம்களை சிங்களம் அழிக்கிறது. அதாவது “வளர்த்த கடா மார்ப்பில் பாய்வது போல்..! இதில் தமிழர்கள் சந்தோச பட வேண்டாம்.

இது சிங்கள பேரினவாதத்தின் எச்சரிக்கை. இது “சிங்கள பெளத்த தேசம்” இப்படி தான் அவர்கள் மார்தட்டிக் கொள்கிறார்கள். விழித்துக் கொள்ளுங்கள். இது நாளை எமக்கும் நடக்கும்.!

error: Alert: Content is protected !!