பிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் காதலில் விழுந்த அனுபமா பரமேஷ்வரன்..! யார் அந்த அதிர்ஷ்டசாலி வீரர் தெரியுமா.?

பிரேமம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். 2015ம் ஆண்டு நிவின் பவுலியுடன் இணைந்து நடித்த அனுபபா முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

அதன்பின் சில தெலுங்கு படங்களில் பிஸியாக இருந்த அனுபமா பரமேஷ்வரனை தமிழுக்கு அழைத்து வந்தார் இயக்குனர் ஆர்.எஸ் . செந்தில்குமார். கொடி திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார் அனுபமா. அதன்பின் மறுபடியும் தெலுங்கு மலையாளம் என பிஸியாக இருக்கிறார்.

இந்த நிலையில் அனுபமா பற்றிய கிசுகிசு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான பூம்ராவுடன் அனுபபா காதலில் விழுந்துள்ளாராம். இவர்களை பற்றி கடந்த ஒரு மாத காலமாக கிசுகிசுக்கள் பரவி வந்த நிலையில் தற்போது அதை உறுதி படுத்துவது போல் டுவிட்டரில் நடந்துகொள்கிறார்களாம்.

அதாவது அனுபமா போதும் அத்தனை பதிவுகளுக்கும் பூம்ரா லைக் போடும் அதே சமயம் பூம்ரா போடும் அனைத்து புகைப்படங்களையும் அனுபபா லைக் செய்கிறாராம். நெருப்பு இல்லாமல் குளிர்காயும் ரசிகர்களிடம் தீ பந்தத்தையே கொடுத்தால் விடுவார்களா என்ன.?

பேஸ்புக்கில் Like செய்ய!!

பூம்ராவிற்கும் அனுபமா பரமேஷ்வரனுக்கும் காதல் என வைரலாக்கி உள்ளனர். ஆனார் இருவருமே இது பற்றி எந்த ஒரு கருத்தும் சொல்லாமல் இருகின்றார்கள். பொறுத்து இருந்து பார்க்கலாம்..!

error: Alert: Content is protected !!