முஸ்லீம்களுக்கு எதிராக இன்னுமொரு சாகும்வரை உணவு எதிர்ப்பு போராட்டம்..! பதற்றமடையும் இலங்கை. !

கடந்த சில நாட்களாக இலங்கையில் பதற்ற நிலை காணப்பட்டது. இதற்கு காரணம் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் நடத்திய உண்ணாவிரத போராட்டம் தான். கடந்த நான்கு நாட்களாக ஆளுநர்களான அசாத் சாலி ஹிஸ்புல்லா, மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் மூவரையும் பதவி விலக்க கோரி

குறித்த உண்ணாவிரதத்தை மேட்கொண்டார். நேற்றைய தினம் இவர்கள் பதவி விலகியதை தொடர்ந்து உண்ணாவிரதத்தை கை விட்டார்.அதன் பின் நல்லிணக்க அரசாங்கத்தில் இருந்த 9 அமைச்சர்கள் பதவி விலகினார்கள்.

சரி பிரச்சனை முடிந்தது என மக்கள் பெருமூச்சி விட இன்று பல இடங்களில் மறுபடியும் போராட்டங்கள் வெடித்துள்ளது. கொழும்பு புறக்கோட்டை பகுதியில் தற்போது நடப்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் பதவி விலகிய ஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுத்தீன், அசாத் சாலி ஆகியோரை உடனடியாக கைது செய்யும் படி

கோசம் எழுப்பி வருகின்றனர். அத்துடன் மாத்தறை பகுதியில் இன்னுமொரு உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகிறது. இதில் நான்கு பிக்குகள் கலந்துகொண்டு உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

பதவி விலகிய மூவரையும் கைது செய்து விசாரணை ஆரம்பிக்கும் வரை சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.!

error: Alert: Content is protected !!