ஒரு டம்ளர் தண்ணீரை பூஜை அறையில் வைப்பதால் நிகழும் மாற்றங்கள்..! கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்..!

இன்று நாம் பார்க்கப் போவது பூஜை அறையில் இருக்கும் பொருட்கள் பற்றியும் அவற்றை ஏன் பயன்படுத்துகிறோம், அவற்றை பயன்படுத்துவது சரியா தவறா போன்ற விடயங்களை தான். இது சைவ சமயம் சார்ந்த விடயங்கள். ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் தயவு செய்து கடந்து போய்விடுங்கள்.

பூஜை அறையில் இரும்பினால் ஆனா எந்த பொருட்களையும் வைக்காதீர்கள். தீய சக்திகளை போல் தெய்வ சக்திகளையும் செயற்பட விடாமல் தடுக்கக் கூடியது. வெள்ளி, வெங்கலம், பித்தளை மற்றும் மண்ணினால் ஆன பொருட்கள் போன்றவற்றை பூஜைக்கு பயன்படுத்தலாம்.

இறை வழிபாட்டிற்கு மிக முக்கியமான இரண்டு விடயம் தேவை தண்ணீர் மற்றும் மலர்கள். பால், பழம் , பலகாரங்கள் என படைப்பதும், தண்ணீரும் மலரும் கொண்டு அர்ச்சனை செய்வதும் ஒன்று தான். தீப ஆராத்தி காட்டும் முன் விநாயகர் துதி பாடிக்கொள்ள வேண்டும்.

அப்படி பாடிய பின் தீபத்தை கையில் எடுத்தால் தீபம் அணையாது இருக்குமாம். அடுத்து நாம் பூஜைக்கு பயன்படுத்தும் மணி. மணியின் ஓசை கேட்டுக் கொண்டிருப்பதால் அந்த பக்கம் தீய சக்திகள் வராதம். மணியின் இசை கேட்கும் அளவு தூரம் வரை எந்த ஒரு தீய சக்தியும் இருக்காதாம்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

பூஜை அறையில் கட்டாயம் தண்ணீர் வைக்க வேண்டுமாம். மாலை 6 மணிக்கு பூஜை முடித்தபின் ஒரு டம்ளரில் நீர் நிரப்பி பூஜை அறையில் வைத்து விடுங்கள். காலையில் அந்த நீரை வீட்டுக் கூறையில் அல்லது வாசலில் இருக்கும் துளசி செடியில் ஊற்றிவிடுங்கள்.

இப்படி செய்வதால் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி, செய்வினை,போன்றவை யாரையுமே பாதிக்காதாம். தெய்வ சக்தி மட்டுமே வீட்டில் நிறைந்து இருக்குமாம்.. பூஜை அறை சம்மந்தமாக ஏதேனும் கேற்க இருந்தால் கொமெண்டில் கேட்கவும்..!

error: Alert: Content is protected !!