துரதிர்ஷ்டசாலியாக இருந்த நான்…! இயக்குனர் ஹரியின் மனைவி நடிகை பிரீத்தா ஹரி பேட்டி..!

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள் என அழைக்கப் பட்டவர்கள் விஜயகுமார் மஞ்சுளா தம்பதி. இவர்களது நான்கு பிள்ளைகளும் தமிழ் சினிமாவில் கலக்கியவர்கள் என்பதால் நட்சத்திர குடும்பமானது. நடிகை வனிதா விஜயகுமார், நடிகர் அருண்குமார் விஜயகுமார், நடிகை பிரீத்தா விஜயகுமார், நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்,

இவர்கள் அனைவரும் சினிமாவின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்கள். இதில் வனிதா விஜயகுமார் கடந்த வருடம் பரபரப்பாக பேசப் பட்டார். தனது பாரம்பரை வீட்டை வனிதா அபகரிக்க பார்க்கிறார் என விஜயகுமார் பொலீஸில் வழக்கு பதிவு செய்யும் அளவிற்கு பிரச்சனை சென்று அமைதியானது.

மற்றவர்கள் அனைவரும் சர்ச்சை இன்றி வாழ்ந்து வரும் நிலையில் பிரீத்தா தற்போது பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துள்ளார். என்னௌ போல் இந்த உலகில் துரதிர்ஷ்டசாலி யாரும் இல்லை என பல நேரங்களில் நினைத்திருகிறேன் ஆனால்

இன்று உலகில் என்னைப் போல் இந்த உலகில் அதிர்ஷ்ட சாலி யாரும் இல்லை என நினைகிறேன்.எல்லோருக்கும் பிறந்த வீட்டில் கிடைக்கும் மகிழ்ச்சி எனக்கு புகுந்த வீட்டில் கிடைக்கிறது. அன்பை பொழியும் மாமா மாமி, அவர்களின் 7 பிள்ளைகள். ஒற்றுமை என்பதற்கு என் குடும்பமே எடுத்துக் காட்டு.

பேஸ்புக்கில் Like செய்ய!!

எம்மை தவறு செய்ய விடாமல் நேர்வழி படுத்தும் அழகிய குடும்பம். என் கடவுள் யாரென கேட்டால் கண்ணை மூடியபடி என் கைகள் கணவர் இயக்குனர் ஹரியை தான் காட்டும். என் வாழ்க்கையில் திருமணத்தின் பின் மகிழ்ச்சியை தவிர வேறு எதையுமே ஹரி கொடுத்ததில்லை.

இன்று வரை மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்காக இப்படி ஒரு நல்ல குடும்பம் கொடுத்த என் கணவருக்கு தான் நன்றி சொல்வேன் என உற்சாகமாக பேட்டி அளித்துள்ளார். வாழ்த்துக்கள் பிரீத்தா ஹரி.!

error: Alert: Content is protected !!