எனக்கு மரண தண்டனை கொடுங்கள்” என் முஸ்லீம் மக்களை பழி வாங்காதீர்கள்..! கோபத்தில் கொதித்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன்..!

நாட்டில் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ் நிலை உருவாகியுள்ள நிலையில் நேற்றைய தினம் 9 முஸ்லீம்கள் பதவி விலகினார்கள். இதற்கான காரணம் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா, மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் ஆகியோரை பதவி விலக்குமாறு கூறி அத்துரலிய ரத்ன தேரர் நடத்திய உண்ணாவிரத போராட்டமே.

நான்கு நாட்களாக குறித்த தேரர் போராட்டம் நடத்தியதால் சிங்கள மக்கள் அனைவரும் குறித்த தேரருக்கு ஆதரவு வழங்கினார்கள். அது மட்டும் இன்றி பல கட்சிகளும் தேரருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதனால் ஆளுநர்கள் இருவரும் பதவி விலகியதை தொடர்ந்து 9 அமைச்சர்களும் பதவி விலகினார்கள்.

இது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் பேசிய ரிஷாட் பதியுத்தீன் என் மீது வீணாக குற்றம் சுமத்தியுள்ளீர்கள். நான் பயங்கர வாதத்திற்கு எதிரானவன் என் மக்களும் அப்படியே. எங்கள் மக்கள் மீது நீங்கள் வன்மத்தை பிரயோகம் செய்கின்றீர்கள். ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல் தீவிரவாத முஸ்லீம்களால் நடத்தப் பட்டது.

அப்பாவி முஸ்லீம்களால் இல்லை ஆனால் நீங்கள் அப்பாவி முஸ்லீம் மக்களை பழி வாங்குகின்றீர்கள். ஒட்டுமொத்த முஸ்லீம்களும் இன்று பயத்தில் இருக்கின்றார்கள். காரணமே இன்றி என்னை பதவி விலக கூறி இனவாதத்தை தூண்டுவோர் போராட்டம் நடத்தினார்கள்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

எம் மக்களை வீட்டிற்குள் முடக்கினார்கள். அதனால் தான் நாம் பதவி விலகினோம். எம் மக்கள் பாதிக்கப் பட கூடாது என்ற ஒரே நோக்கம் தான் எம் பதவி விலகலுக்கான காரணம். வேறு யாருக்கும் பயந்து பதவி விலகவில்லை. சரி என்மீது என்ன தவறு உள்ளது? பொலீஸார் புலனாய்வு பிரிவினர் விசாரியுங்கள்.

என்னில் தவறு இருந்தால் எனக்கு இலங்கையின் அதி உச்ச தண்டனையான மரண தண்டனை கொடுங்கள். இல்லாவிட்டால் நான் குற்றம் அற்றவன் என்பதை சிங்கள முஸ்லீம் தமிழ் மக்கள் அறிய நாட்டுக்கு சொல்லுங்கள், என் ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தையும் பழி வாங்காதீர்கள் என உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார். இதோ வீடியோ..!

Video Gredit Goes To Lanka sri

error: Alert: Content is protected !!