புதுச்சேரி ஆட்சி நிர்வாகப் பொறுப்பு யாருக்கு?

புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு, கவர்னர் கிரண்பேடி ஒரு பெரும் சவாலாக திகழ்ந்தார்.சமூக ஊடங்களில் ஆட்சியாளர்களை பற்றி விமர்சித்தும் வந்தார் என குறிப்பிடத்தக்கது. இதற்கு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேரடியாகவும், அமைச்சர்கள், மற்றும் எம்.எல்.ஏ., க்கள் மூலமும் பதிலடி கொடுத்து வந்தார்.

இதனால் முதல்வர் – கவர்னர் இடையே மோதல் வர புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் குழப்பம் நிலவி வந்தது. இதையடுத்து புதுச்சேரி அரசின், தினசரி நிர்வாக விவகாரங்களில், கவர்னர் தலையிடுவதாக புகார் எழுந்தது. மேலும் சென்னை உயர்நீ்திமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புதுச்சேரியின் தினசரி நிர்வாக விஷயங்களில் கவர்னர் தலையிடக் கூடாது என தீர்ப்பளித்து இருந்தது.

.இந்த தீர்ப்பை எதிர்த்து கவர்னர் கிரண் பேடி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கவர்னர் தரப்பில் கூறப்பட்டது என்னவெனில் , உயர் நீதிமன்ற உத்தரவால் புதுச்சேரியின் நிர்வாகம் தொடர்பான விஷயங்களிலும் மற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகளிலும் குழப்பம் நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மனு மீது இன்று தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது.

error: Alert: Content is protected !!