தொடரும் அனிதாக்களின் மரணம்..! இன்றும் தமிழகத்தில் இருவர் தற்கொலை..! இது எம் நாட்டின் சாபமா.?

இந்தியாவில் இன்றைய தினம் நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியது. நீட் தேர்வு என்றாலே மாணவர்களை பொறுத்த வரையில் கயிற்றுடன் நிற்கும் எமன் தான். ஏற்கனவே நீட் பரீச்சையில் தோல்வி அடைந்த அனிதா தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தை உலுக்கியது.

மீண்டும் வேற அனிதாக்கள் வேண்டாம் என பலரும் போராடினார்கள். ஆனால் வைத்திய கனவுடன் நீட் தேர்வு எழுதிய இரண்டு அனிதாக்கள் இன்று உலகைவிட்டு பிரிந்துள்ளனர்.

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த ரிதுஸ்ரீ என்ற மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதற்கான காரணம் இன்றைய தினம் வெளியான நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்தமையே என தெரியவந்துள்ளது. அடுத்தவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டையை சேர்ந்த வைஷியா… நீட் தேர்வில் தோல்வி அடைந்ததை அடுத்து தீ வைத்து தற்கொலை சென்றுகொண்டுள்ளார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

இந்த நீட் தேர்வில் இன்னும் எத்தனை அனிதாக்கள் இறந்துள்ளனர் என்பதை நாளைய தினம் தெரியும்…இந்த சாபம் எம்மைவிட்டு என்று தீரும்..!

error: Alert: Content is protected !!