களுத்துறையில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த 5 பேர் வைத்தியசாலையில்..!

களுத்துறை மாவட்டம் ஹொரணை பகுதியில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த ஐந்து பேர் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். நேற்று இரவு இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

எரிபொருள் நிரப்பும் இடத்திற்கு வந்த இரண்டு இளைஞர்கள் போத்தலில் பெற்றோல் நிரப்பித் தரும்படி கேட்டுள்ளனர். ஆனால் எரிபொருள் நிலையத்தின் ஊழியர்கள் போத்தலில் பெற்றோல் கொடுக்க முடியாது என மறுத்துள்ளனர். இதனால் ஊழியர்களுடன் வாய் தகராறு இடம் பெற்றுள்ளது.

அதன் பின் அங்கிருந்து சென்ற இருவரும் இரும்பு கம்பிகளுடன் 5 இளைஞர்களுடன் எரிபொருள் நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கு இருந்த ஊழியர்கள் முகாமையாளர், என அனைவரையும் இரும்பு கம்பிகள் கொண்டு தாக்கியுள்ளனர்.

ஊழியர்கள் பதில் தாக்குதல் நடத்தினாலும் அவர்களது இரும்பு கம்பிகளால் அதிகம் தாக்கப் பட்டுள்ளனர். இதில் எரிபொருள் நிலையத்தில் கடமையில் இருந்த 5 ஊழியர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

இதில் இருவர் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப் பட்டுள்ளனர். இது தொடர்பாக பொலீஸார் விசாரணை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பாக எரிபொருள் நிலையத்தில் கடமையில் உள்ளவர் கூறிய போது…இருவரும் சென்று ஆட்டோ ஒன்றில் நபர்களை கூட்டிக் கொண்டு வந்தே எங்களை தாக்கினார்கள்…

எம்மால் சமாளிக்க முடியாமல் போனது. எம்முடன் வேலை செய்யும் ஒருவரின் தலையில் அடித்தார்கள். அவர் படுகாயம் அடைந்துள்ளார் என மேலும் கூறியுள்ளார். இதோ வீடியோ.!

Video Gredit Goes To:Hiru NEWS

error: Alert: Content is protected !!