மறுபடியும் கேரளாவில் பரவுகிறது நிபா, பீதியில் தமிழகம் மற்றும் கர்நாடகம்

என்னது ‘நிஷா’ வா……..நிஷா இல்லப்பா நிபா. கொச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் ‘நிபா’ வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு செய்யப்பட்ட ரத்த பரிசோதனையில் வைரஸ் உள்ளது உறுதியாகியுள்ளது. கேரளாவின் கொச்சியை சேர்ந்த கல்லுாரி மாணவர் ‘நிபா’ வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக புனேவில் இரத்த பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு இருந்தது. இந்த பரிசோதனையின் முடிவில் மாணவருக்கு ‘நிபா’ வைரசால் பாதிப்பு உள்ளது என உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சர் கே.கே. சைலஜா கூறினார்.

நிபா வைரஸ் நோயின் அறிகுறிகள்! இந்த வைரஸ் ஆல் தாக்கப்படுவோருக்கு, காய்ச்சல், தலைவலி, தலைசுற்றல், குழப்பமான மனநிலை போன்றவை ஏற்படும். சிலர் கோமா நிலைக்கு சென்று உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வைரஸ் தாக்குதலுக்கு எந்த தனிப்பட்ட சிகிச்சைகள் எதுவும் இல்லை. அதனால் வைரஸ் தாக்கியவர்களை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ‘நிபா’ வைரஸை சமாளிக்க மாநில சுகாதாரத் துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும், யாரும் பயப்பிட தேவையில்லை எனவும் கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு 17 பேர் உயிரழந்தார்கள். தற்போது அந்நோய் முற்றிலுமாக அழிந்துவிட்டது பீதியடைய வேண்டாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் கூறிய நிலையில் மீண்டும் இந்நோய் தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளது. தற்போது 80 பேர் இந்த வைரசால் தாக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. கேரள் மாநிலத்தை சுற்றியுள்ள கர்நாடகா, மற்றும் தமிழ்நாடு மாவட்டத்தினர் சற்று கவனமாக இருங்கள்.

நாம் சாப்பிடும் பழங்கள் மூலமாக அதிகம் பரவும். கேரள மாவட்டதிலிருந்து வரும் காய்கறி,பழங்கள் பார்த்து  பயன்படுத்த வேண்டும். இது தாக்கி 90% உயிர் பிழைக்கவில்லை என்பது கூடுதல் தகவல். பறவைகள் மூலமாகத்தான் அதிகம் பரவுகிறது.

இப்படிக்கு

உங்களில் ஒருத்தி

error: Alert: Content is protected !!