சம ஊதியம் கேட்டுப் போராட்டம் நடத்தும் பெண்கள்

சுவிட்சர்லாந்தில் உள்ள பெண்கள் ஆண்களுக்கு நிகராக சம ஊதியம் வழங்க வேண்டி 30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பெண்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சுவிட்சர்லாந்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம ஊதியம் வழங்ககோரி 1991ம் ஆண்டு ஜூன் 14 ம் நாள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அலுவலகத்திலிருந்தும், வீட்டிலிருந்து வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டம் நடந்து 30 வருடங்கள் முடிந்தும் இந்த விசயத்தில் பெரிய அளவு மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை என தொழிற்சங்கங்களும் பெண்கள் உரிமைகள் அமைப்பும் தெரிவிக்கின்றன. சுவிட்சர்லாந்தில் உள்ள பெண்களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தை விட 20% குறைவாகவே உள்ளது. மேலும் கல்வித்தகுதி சமமாக இருந்தாலும் பெண்களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தை விட 8% குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் தொழிற்சங்கமான யூ.என்.ஐ.ஏ. தனது அறிக்கையில், கல்வித்தகுதி மற்றும் துறை சார்ந்த அனுபவமும் சமமாக இருந்தாலும் ஒரு பெண் என்ற காரணத்தினால் மட்டும் ஊதியம் வாயிலாக 300000 ப்ரான்க் (நமது இந்திய மதிப்பில் ரூ.2.09 கோடி) இழப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!