இன்றைய ராசி பலன் 05.06..2019

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.05-06-2019, வைகாசி 22, புதன்கிழமை, துதியை திதி பகல் 12.03 வரை பின்பு வளர்பிறை திரிதியை. திருவாதிரை நட்சத்திரம் இரவு 09.54 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷராசி நேயர்களே:தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும்.அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆதாயமும் தருவதாக இருக்கும்.

ரிஷபராசி அன்பர்களே:அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் சற்று இழுபறிக்குப் பிறகு சாதகமாக முடியும்.பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சகோதரர்கள் கேட்கும் உதவியை செய்து தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள்.நண்பர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும்.

மிதுனராசி காரர்களே:யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். சிலருக்குக் குடும்பத்தினருடன் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேச்சில் பொறுமை அவசியம்.தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும்.

கடகராசி நேயர்களே:தாய்வழி உறவினர்கள் கேட்கும் உதவியைச் செய்து தருவீர்கள்.விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். உடல் அசதி, சோர்வு வந்து விலகும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும்.சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும்.

சிம்மராசி அன்பர்களே:தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சிலருக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.

கன்னி ராசி காரர்களே:உடல் ஆரோக்கியம் மேம்படும்.பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும்.உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

துலாராசி உறவுகளே:கூடுமானவரை வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடுவது நல்லது.தன்னம்பிக்கை குறையும். வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். வெளியிடங்களில் உணவு உண்பதைத் தவிர்க்கவும்.உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.

விருச்சிகராசி நேயர்களே:சந்திராஷ்டமம் தொடர்வதால்சிலருக்கு நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். எதிர்பாராத பயணங்களுக்கு வாய்ப்பு உண்டு. லர் உதவுவதைப் போல் உபத்திரவம் தருவார்கள்.சிலருக்கு மகான்களின் தரிசனமும், அவர்களின் ஆசிகளைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசுராசி அன்பர்களே:மனைவிவழியில் அனுகூலம் உண்டு. புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும்.அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

மகரராசி காரர்களே:வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள்.உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர் கள். நட்பு வட்டம் விரியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். அரசால் அனுகூலம் உண்டு.குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

கும்பராசி உறவுகளே:எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். நீண்டநாள் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை குறையும்.சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும்.

மீனராசி நேயர்களே:பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. சகோதரர்களால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நீண்டநாள் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.

error: Alert: Content is protected !!