40 நாட்களின் பின் தோண்டி எடுக்கப்படவுள்ள தீவிரவாதிகளின் உடல்கள்..! இதற்காக தானாம்..!

ஏப்ரல் மாதம் 21ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தொடர் தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் தீவிர சோதனை நடவடிக்கை இடம்பெற்றது. இதன் போது சாய்ந்தமருது பகுதியில் தீவிரவாதிகள் தங்கி இருப்பதாக பொலீஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து..

குறித்த வீட்டை சோதனையிட முயன்றபோது பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப் பட்டது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினருடன் பொலீஸார் இணைந்து பதில் தாக்குதல் நடத்தினார்கள்.. அதே நேரம் தீவிரவாதிகள் அவர்களிடம் இருந்த தற்கொலை குண்டை வெடிக்க வைத்தனர்.

இதில் தீவிரவாதி சஹ்ரானின் தந்தை ஹசீம், அவரது சகோதரர்களான சைனி மற்றும் ரில்வான் உட்பட 6 சிறுவர்கள் 3 பெண்கள் என 15 பேர் மரணமடைந்தனர். இவர்களது சடங்களை இஸ்லாமியர்கள் யாரும் பொறுப்பு எடுக்காததால் இஸ்லாமிய மதச் சடங்குகள் எதுவும் இன்றி

அம்பாறை பொது சுசான பூமியில் அடக்கம் செய்யப் பட்டது. இந்த நிலையில் அடக்கப் பட்ட தீவிர வாதிகளின் சடலங்கள் அனைத்தும் மீண்டும் நாளை தோண்டி எடுக்கப்பட உள்ளது. அம்பாறை நீதிமன்றத்தின் உத்தரவின் படி அமைய மரபணு பரிசோதனைகளுக்காக தோண்டி எடுக்கப் பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..!

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!