மனைவியின் நடத்தையில் சந்தேகம் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

1)திண்டுக்கல் அருகே வேம்பார்ப்பட்டியை சேர்ந்த பிரபு என்றவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மலர் செல்வி என்பவருக்கும் திருமணம் நடந்து சில காலம் ஆனது. மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த பிரபு அடிக்கடி இது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார் இது நேற்று முற்றிப் போக உளியால் அடித்துக் கொலை செய்துள்ளார் பிரபு.

2)மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரை காரில் சென்று கொண்டே கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அங்கே இருப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. செந்தில் குமார் என்பவர் சரக்கு லாரி பதிவு செய்யும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு அவர் பணி முடித்து வருகையில் மகிழூந்தில் சென்ற நபர்கள் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்கள். இது திட்டமிட்ட படுகொலை என போலிஸ் தரப்பு கூறுகிறது. வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறது.

3)மாமல்லபுரம் அருகே குடும்பத் தகராறில் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்.தானும் தற்கொலை செய்ய முயன்ற போது மக்கள் பிடித்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

 

error: Alert: Content is protected !!