தெர்மாக்கோல் மன்னனை மிஞ்சிய ட்ரம்ப்- வைரலாகும் ட்ரம்பின் ட்விட்

லோக்சபா தேர்தலுக்கு முன் பாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை தகர்க்க இந்திய போர் விமானங்களை அனுப்பினார்கள். அப்போது பிரதமர் நரேந்திர மோடி ஒரு பேட்டியில் மேகமூட்டம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் அந்த நேரத்தில் தாக்குங்கள் என்று கூறி சர்ச்சையில் ஈடுபட்டார். அது போல நேற்று செவ்வாயின் ஒரு பகுதி தான் நிலவு என்று ட்ரம்ப் கூறி சர்ச்சை கிளப்பியுள்ளார்.

நேற்று இரவு ட்ரம்ப் தனது ட்விட்டரில் “நாம் செலவழைக்கின்ற அனைத்து பணத்திற்கும் , நாசா சந்திரனுக்கு செல்வது பற்றி பேசக் கூடாது, 50 ஆண்டுகளுக்கு முன்பே நாம் அதை செய்து விட்டோம். அவர்கள், மிகப்பெரிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் (செவ்வாய் அதில் சந்திரன் ஒரு பகுதியாகும்). ஆகியவைகளை பாதுகாப்பு மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும”.

என்று ட்ரம்ப் தெரிவிக்க நெட்டிசன்கள் இது தான் வாய்ப்பு என கிண்டல் அடிக்க துடங்கி விட்டார்கள். கார்ட்டூன் படங்கள் எல்லாம் சித்தரித்து அதில் செவ்வாயும் நிலவும் ஒன்று போல் இருப்பதாக காட்டியுள்ளார்கள். மெக்ஸிக்கோவிற்கு 7000 கோடி செலவில் சுவர் கட்ட அனுமதி வழங்கியுள்ளார் ட்ரம்ப். இதை கிண்டலடிக்கும் வகையில் ”எப்போது செவ்வாயுக்கும் நிலவுக்கும் இடையில் மதில் சுவர் கட்ட போகிறீர்கள் ”என்றும் மார்ஸ் மூன் சேர்ந்தால் மெரூன் என்று ஒருவரும் வேடிக்கையாக ட்விட் செய்துள்ளார்கள்.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!