பிரபல நடிகை சினேகாவின் வயிற்றில் எட்டி உதைத்த நடிகர்.. ! அவரே கொடுத்துள்ள பேட்டி..!

சினேகா. தமிழ் சினிமாவில் இவரது நடிப்பு இன்றளவும் பாராட்டப் பட்டுக் கொண்டே இருக்கிறது. ஏப்ரல் மாதத்தில், காதல் சுகமானது, பார்த்தீபன் கனவு, பிரிவோம் சந்திப்போம், ஆட்டோகிராப், வசீகரா, ஜனா, என மக்கள் மனதில் பல திரைப்படங்கள் இன்றளவும் பேசப் படுகின்றது.

சினிமாவிற்கு வந்து குறுகிய நாட்களில், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நாயகர்களுடன் நடித்த சினேகா சிம்பு தனுஷ் போன்றோருடனும் நடித்தார். அதன் பின் நடிகர் பிரச்சன்னாவை திருமணம் செய்து குழந்தைக்கு அம்மாவாக இருந்தாலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபல நடிகரான பாலாசிங், தனுஷ் சினேகா இணைந்து நடித்த புதுப்பேட்டை திரைப்பட அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.ஒரு காட்சியில் சினேகாவின் வயிற்றில் நான் எட்டி உதைப்பது போல் இருக்கும்.

அந்த காட்சியை மிகவும் பொறுமையாக நடித்தேன் ஆனால் இயக்குனர் செல்வாவோ பல டேக்குகள் எடுத்தார். பலமுறை ஒரே காட்சியை எடுத்ததால் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்பதால் எட்டி உதைத்த காட்சி நிஜமாகவே சினேகாவிற்கு பட்டுவிட்டது.

பேஸ்புக்கில் Like செய்ய!!

செல்வா காட்சியை ஓகே சொல்லிவிட்டார் ஆனால் எனக்கு சங்கடமாகிவிட்டது. இன்று வரை திரைப்படத்தில் அந்த காட்சி வந்தால் மனம் குற்ற உணர்வாகிறது..என தனது நீண்ட நாள் கவலையை கூறியுள்ளார். புது பேட்டை பாகம் இரண்டு தற்போது தயாராகி வருவது குறிப்பிட தக்கது..!

error: Alert: Content is protected !!