“உன் பேர் சொல்ல ஆசை தான்” என மின்சார கண்ணா திரைப்படத்தில் விஜயின் ஜோடியாக நடித்த நடிகை இப்போ எப்படி இருக்கார் தெரியுமா.?

சினிமாவை பொறுத்த வரையில் நடிகர்களோ நடிகைகளோ வருவதும் போவதும் வழமை தான். நிலைத்து நிற்க நடிப்பு, திறமை, அழகு வேண்டும். சிலருக்கு இவை இருந்தாலும் நிலைத்து நிற்க மாட்டார்கள். அதற்கு காரணம் அவர்களால் ரசிகர்களை கவர முடியாதது தான்.

முதல் திரைப்படத்திலேயே இளைய தளபதி விஜயுடன் ஜோடி சேர்ந்தவர் நடிகை மோனிகா..பிரபல ஹிந்தி நடிகையான இவர் விஜய் நடிப்பில் மின்சார கண்ணா திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் ரம்பா மற்றும் குஷ்பு, மணிவண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர்.

திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகவில்லை என்றாலும் அதிகம் பேசப்பட்டது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ஆனது அதிலும் “உன் பேர் சொல்ல ஆசை தான்” போய் பிரண்டை பார்த்தால் வரச்சொல்லு நிலவே போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது.

இன்றளவும் பலரது ரிங்டோனாக இருப்பது உன் பேர் சொல்ல ஆசைத் தான் பாடல். ஆனால் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகையின் பெயர் தான் பலருக்கும் மறந்து போயிட்டு. மின்சார கண்ணா திரைப்படத்தின் பின் மோனிகாவிற்கு வாய்ப்புகள் வரவில்லை, அதனால் திருமணம் செய்து செட்டிலாகி விட்டார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசை என கூறி வருகிறார்.!

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!