10 வயதில் அறியாது செய்த தவறுக்காக 18 வயதில் தூக்கு தண்டனை பெறும் சிறுவன்..!

10 வயதில் போராட்டம் நடத்தியதற்காக 18 வயதில் சிறுவன் ஒருவனுக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. சிறுவன் எதுவும் அறியாத வயதில் தாய் தந்தையினருடன் போராட்டத்திற்கு சென்றதே காரணம்..!

சவூதி அரேபியாவில் ஷியா முஸ்லீம்களை அரசு ஓரம் கட்டுவதாக கூறி அரச குடும்பத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதில் பெற்றோருடன் 10 வயதில் கலந்துகொண்டவன் சிறுவன் முர்தஜா குரேய்ரிஸ். எதுவும் அறியாத வயதில் தாய் தந்தையுடன் போராட்டத்திற்கு சென்ற சிறுவன் மீது வழக்கு பதிவாகியிருந்த நிலையில்

குடும்பத்துடன் பயணம் சென்றுகொண்டிருந்த சிறுவனை தடுத்து நிறுத்தி 13 வயதில் கைது செய்தனர். 3 1/2 வருடம் சிறை கைதி, பின் தீவிரவாத போராட்டம், பொலீஸார் மீது தாக்குதல் போன்றவற்றில் 1 1/2 வருடம் என ஐந்து வருட சிறை வாழ்க்கு பின் தற்போது மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.

குறித்த சிறுவனின் மூத்த சகோதரனை தீவிரவாத போராட்டம் என சுட்டுக் கொன்ற பொலீஸார், சிறுவனது தந்தை இன்னுமொரு சகோதரனையும் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிட தக்கது…!

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!