ஒரு நாள் இரவுக்கு 25 லட்சமா? அப்படி என்ன தான் இருக்கு அந்த இரவில்?

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சுற்றுலா செல்ல விரும்புவர்கள் அங்கு ஒரு நாள் இரவு தங்க நாசா மையத்துக்கு ரூ.25 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என நாசா அறிவித்துயுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் ஒன்றை அமைத்து வருகின்றன. இது விண்வெளியில் உள்ளது. இந்த நிலையில் சர்வதேச விண்வெளி ஆய்வகத்தை வர்த்தக ரீதியில் சுற்றுலா மையம் ஆக்க அமெரிக்காவின் நாசா மையம் திட்டமிட்டுள்ளது.

அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி ஆண்டுக்கு ஒன்றுக்கு 2 முறை சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். அவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட 2 தனியார் நிறுவனங்களின் ராக்கெட்டில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பதையும் நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு சுற்றுலா செல்பவர்கள் அங்கு ஒரு நாள் இரவு தங்க நாசா மையத்துக்கு ரூ. 25 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டுமாம்

சுற்றுலா பயணி தங்கவும், உணவு, குடிநீர் மற்றும் உயிர்வாழ தேவையான ஆக்சிஜன் உள்ளிட்ட பல அன்றாட தேவைகளுக்காக இந்த கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வகம் செல்வதற்கான சுற்றுலா அடுத்த (2020) ஆண்டு தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் பற்றாக்குறை ஒரு பக்கம் என்றால் பணம் வைத்துக் கொண்டு செலவு செய்யத் தெரியாதவர்கள் ஒரு பக்கம். போடுங்க எங்க அம்பானிக்கும்,விஜய் மல்லையாவுக்கும் ஒரு டிக்கெட்ட..

error: Alert: Content is protected !!