தலையில் பேன், ஈரு , தொல்லை தாங்க முடியவில்லையா.? இவற்றை அழிக்க இந்த ஒரு பொருள் போதும்..! படியுங்கள் பகிருங்கள் .!

வணக்கம் உறவுகளே..! இன்றைய மருத்துவ குறிப்பில் தொல்லை கொடுக்கும் பேனை விரட்டும் வழி பற்றி பார்க்கலாம். சிறு வயதில் இருந்தே இந்த தொல்லை ஆரம்பித்து விடுகிறது. அதாவது ஒரு வயது குழந்தைக்கு கூட பேன் வந்துவிடுகிறது.

அதே போல் பள்ளி செல்லும் காலங்களில் அதிகரிக்க அம்மாவிடம் பாட்டி என பேன் பார்பதாக கூறி எம் தலையில் கொட்டி அசைய விடாது சில மணி நேரத்தை வீணாக்குவோம்.ஆனால் தற்போது பேனுக்காக பல மருந்துகள் மார்கெட்டுக்கு வந்து விட்டது ஆனால் அவை பலன் அளிக்கிறதா என கேட்டால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

பேன்களுடன் எங்கள் தலைமுடியையும் உதிர செய்து விடுகிறது ஆங்கில மருந்துகள். அதன் பின் பொடுகு போன்ற பிரச்சனைகளையும் கொண்டுவந்துவிடுகின்றது. சரி அப்படியானால் இதற்கு தீர்வு தான் என்ன ?
இருக்கிறது அதுவும் இலகுவாக வீட்டிலேயே செய்யலாம்.

என்ன தெரியுமா? பூண்டு மட்டும் தான் வேண்டும் பூண்டை நன்றாக மிக்ஸியில் அடித்து ஜூஸாக்கிக் கொள்ளுங்கள். ஒரு துணியில் அந்த ஜூஸை நனைத்து தலை முழுவதும் நன்றாக தேயுங்கள் அப்படியே இரண்டு மணி நேரம் விட்டுவிட்டு பின்

ஷாம்பு பாவித்து நன்றாக தலையை கழுவி விடுங்கள். அதன் பின் பாருங்கள் உங்கள் தலைக்கு பேன் வரவே வராது. இதில் எந்த பக்க விளைவுகளும் இல்லை. பூண்டின் சாறு தலை முடி உதிர்வதை தடுப்பதோடு பொடுகு வருவதையும் தடை செய்கிறது !

error: Alert: Content is protected !!