இவ்வளவு இலகுவாக உடல் எடை குறைக்க முடியுமா என உங்களை வியக்க வைக்கும் சூப்பர் பானம்..! அட குடிச்சி பாருங்க..!

வணக்கம் பிரண்ட்ஸ்..! இன்றைய அழகு குறிப்புகள் பகுதியில் நாம் பார்க்கப் போவது வழக்கமாக உங்களுக்கு கொடுக்கும் உடல் எடை குறைப்பு டிப்ஸ்களை விட வித்தியாசமான ஒரு முறை. கடினம் இன்றி அதே நேரம் உடல் ஆரோக்கியம் உள்ள சிறுவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்தக் கூடிய ஒரு டிப்ஸ் தான்.

சில பெற்றோர் கொழு கொழு குழந்தை வேண்டும் என்று ஆசை படுவார்கள். சின்ன வயதில் இருந்தால் பரவாயில்லை 6.7 வயதாகும் போது ஓவர் பாரமாகி நோயாளி குழந்தையாக சில குழந்தைகள் மாறிவிடுகின்றது. அதே போல் தான் பெரியவர்களும்.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

ஸ்லிமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள் இதோ இருக்கிறதே எந்த ஒரு பாதிப்பும் இன்றி 8 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண், சிறுவர்கள் என அனைவரும் என இதனை எடுத்துக் கொள்ளலாம். முதலில் தேவையான பொருட்களை பார்க்கலாம். கொட புளி என்று சொல்லப் படுகின்ற கொரக்கா புளி, ஏலக்காய், நாட்டு கருப்பட்டி, முதலில் கொட புளியை அரை கப் தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள்.

அது முப்பது நிமிடங்கள் வரை ஊற வேண்டும். ஒருவருக்கு என்றால் ஒரு கொட புளி போதுமானது. பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு அல்லது மூன்று கரண்டி நாட்டு கருப்பட்டி போட்டு அரை கப் நீர் விட்டு கருப்பட்டி தண்ணீர் செய்து ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது முப்பது நிமிடம் ஊற வைத்த புளியை நன்றாக கையால் கசக்கி பிழிந்து வடித்துக் கொள்ளுங்கள். கருப்பட்டி நீர் காய்ச்சும் போது ஏலக்காயையும் அதனுடன் போட்டு விடுங்கள். இப்போது ஒரு கப்பை வைத்து அதில் அரை கப் கொடபுளி நீர் அரை கப் கருப்பட்டி நீர் வடித்து ஊற்றுங்கள். இந்த பானத்தை காலை 10 மணியில் இருந்து 12 மணிக்குள் குடித்து வாருங்கள்.! உடல் எடை இலகுவாக குறைந்துவிடும்.

error: Alert: Content is protected !!